ராஜீவ் கொலை வழக்கு; 07 பேரின் விடுதலை தாமதமாகும் வாய்ப்பு

0
492
Rajiv Gandhi murder case Governor decide after

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகின்றது. (Rajiv Gandhi murder case Governor decide after)

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலாலுக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியது.

ஆளுநர் பன்வாரிலால் அந்த பரிந்துரையை ஏற்று ஆலோசனை நடத்தி வருவதுடன், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளார்.

இதற்கிடையே ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் உறவினர்கள் ஆளுரைச் சந்தித்து 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், பன்வாரிலாலை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரும் சந்தித்து பேசினார்கள்.

இதன்போது, அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த முடிவையும் எடுக்க கூடாது’ என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பான மனுவையும் ஆளுநரிடம் அவர்கள் தாக்கல் செய்தனர். அவர்களது கோரிக்கையையும் ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்னர் ஆளுநர் உரிய முடிவை எடுத்து அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.

இதனால் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. 7 பேர் விடுதலை மேலும் தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rajiv Gandhi murder case Governor decide after