மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நியமனம்!

0
75
Marudapandy Rameswaran appointed Chief Minister

{ Marudapandy Rameswaran appointed Chief Minister }
மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ,ஆளுநர் பி.பீ. திசாநாயக்க முன்னிலையில் இன்று அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மத்திய மாகாண தமிழ் கல்வி, தோட்ட உட்கட்டமைப்பு, விவசாய, மீன்பிடி, இந்து கலாசார அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் செயற்படுகின்றார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: Marudapandy Rameswaran appointed Chief Minister

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Live

Tamil News Group websites