டெல்லியில் அடுக்கு மாடி வீழ்ந்து விபத்து; 4 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

0
206
Four children killed building collapse northwest

டெல்லியில் இன்றைய தினம் மூன்று அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். (Four children killed building collapse northwest)

வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.

குறித்த அடுக்கு மாடி வீட்டில் வசித்து வந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரைக் காயங்களுடன் மீட்டனர்.

மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, பெண் ஒருவர் ஆகிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Four children killed building collapse northwest