அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு! – குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் மனு!

0
60
ayanavaram girl rape case - 6 people plead cancellation thug legislation

அயனாவரம் சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ayanavaram girl rape case – 6 people plead cancellation thug legislation 

அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கடந்த 5-ம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுரேஷ், ரவிகுமார், அபிஷேக் என்பவர்கள் உள்ளிட்ட 6 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுக்களில் உரிய ஆதாரங்கள் இல்லாமல் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :