ஒடிசா மாநிலத்தில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; ஐவர் பலி

0
169
 killed 2 injured Odisha road accident

ஒடிசா மாநிலத்தில் கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். (killed 2 injured Odisha road accident)

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 இலட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இருந்து பட்ராபூர் பகுதிக்கு உயிரிழந்த உறவினரின் அஸ்தியை கரைப்பதற்காக காரில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது, தீடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், படகு மூலம் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையின் மூலம் ஒருவர் மாத்திரமே காயங்களுடன் மீட்கப்பட்டனர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; killed 2 injured Odisha road accident