எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

0
442
eliminate karunas mla's post petition speaker india tamil news

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate karunas mla’s post petition speaker india tamil news

இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் சிறையில் உள்ள அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரின் பேச்சுக்கு நாடார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து கருணாஸ் குறித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில், “சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதியையும் மரபையும் சீர்குலைக்கும் வகையில் எம்.எல்.ஏ கருணாஸ் செயல்பட்டுள்ளார்.

வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லாத முதல்வர் எடப்பாடியை அச்சுறுத்தும் வகையிலும், அவர் சார்ந்த சாதியை இழிவுப்படுத்தியும் உள்ளார்.

போலீஸாரை மிரட்டி சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

திருவாடானை தொகுதியின் அனைத்துச் சமூக மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸின் பேச்சு, பிற சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழல் கலவரமாக மாறக்கூடிய நிலை உருவாகி வருகிறது. சட்டத்துக்குப் புறம்பான வகையில் தகுதியை இழந்து கருணாஸ் செயல்பட்டதற்காக அவரை உடனடியாகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததைச் சட்டமன்றத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக எண்ணி அவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :