தோனியால் தலைநிமிர்ந்த வீரரின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

0
234
ambati rayudu birthday celebration team

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பிறகு, அம்பதி ராயுடுவின் கிரிக்கெட் கிராஃப், அவரே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. தோனியின் வழிநடத்தல் காரணமாக, கடந்த ஐபிஎல் தொடரில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடுவுக்கு தொடர்ந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ambati rayudu birthday celebration team india,tamil videos,video updates,cricket news,indian cricket news updates

இங்கிலாந்து தொடரில் கூட முதலில் அவர் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால் நீக்கப்பட்டார். அதன்பிறகு, கடும் பயிற்சியின் பலனாக யோ-யோ டெஸ்ட்டில் வென்றதால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாது, லோகேஷ் ராகுல் உட்கார வைக்கப்பட்டு, இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தளவிற்கு அம்பதியின் ஆட்டத்தை பிசிசிஐ நம்புகிறது.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய நிலையில், அம்பதி ராயுடுவும் தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். கேக்கை வெட்டி முதலில் தோனிக்கு ஊட்டிய நொடியில், சாஹல் அவரின் முகம் முழுக்க கேக்கை நிரப்ப, வீரர்களின் வாழ்த்துகளுக்கு மத்தியில் தனது 33வது வயதை வரவேற்றார் ராயுடு.

ambati rayudu birthday celebration team india

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news