எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

0
365
missile test succeeded intercept enemy missiles india tamil news

எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.missile test succeeded intercept enemy missiles india tamil news

ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில், இருந்து இடைமறித்து தாக்கும் ஏவுகணை நேற்றிரவு ஏவப்பட்டது.

பிடிவி என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த பிரித்வி டிஃபென்ஸ் வெகிக்கிள், திட்டமிட்டபடி வானில் இலக்கை தாக்கி அழித்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக திட்டமிட்டபடி அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் இந்த அமைப்பில், ராடார் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு எதிரி ஏவுகணை வருவதை கண்காணிக்கும்.

இந்த தகவல் கணினி முறை மூலம், இடைமறித்து தாக்கி அழிக்கும் பிடிவி ஏவுகணைக்கு அனுப்பப்பட்டு, இலக்கை நோக்கி ஏவப்படும்.

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதன் மூலம், இரண்டடுக்கு ஏவுகணைப் பாதுகாப்பு முறையை உருவாக்கும் இலக்கில், இந்தியா முக்கியமான மைல்கல்லை எட்டியிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :