ரபேல் விமான விவகாரம்; பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

0
440
investigative committee set raphael air case thirumavalavan

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். (investigative committee set raphael air case thirumavalavan)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி அம்பலப்படுத்தியுள்ளார்.

அதில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் கூறிய பின்பும் தமிழக அரசு பரிந்துரையை ஆளுநர் இதுவரை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே இதை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். இவ்விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததால் தான் பெட்ரோல், டீசல் விலை மாதத்துக்கு இரண்டு முறை உயர்கிறது. இதை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

ஹெச். ராஜா போன்றவர்கள் தமிழக அரசையும், தமிழக பொலிஸ் துறையையும் மிக மோசமாக விமர்சிக்கிறார்.

பலரும் பலவிதமாக மேடைகளில் பேசுகின்றனர். இது ஜாதி, மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.

இவர்கள் பேசுவது அரசுக்கும், பொலிஸ்துறைக்கும் ஒரு சவாலாக உள்ளது. ஆகவே ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தமிழக அரசு மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; investigative committee set raphael air case thirumavalavan