இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை; ஆறுகளில் அபாயம்; பாடசாலைகள் பூட்டு

0
476

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. (Himachal Pradesh Rain Schools Closed 3 Districts India Tamil News)

குறித்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் உள்ளதுடன், ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு பாய்கின்றது.

குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த குலு மற்றும் மனாலி பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லொரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மண்சரிவினால் வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குலு மற்றும் கின்னார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் வீதியில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், கின்னார், குலு மற்றும் காங்ரா மாவட்டங்களில் இன்றும் அரசு மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags;  Himachal Pradesh Rain Schools Closed 3 Districts India Tamil News, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News, Tamil News Live