சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்! – பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

0
503
first airport sikkim - narendra modi opened india tamil news

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.first airport sikkim – narendra modi opened india tamil news

தலைநகர் காங்டாக்கில் இருந்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

பொறியியல் வல்லுனர்களுக்கு பெரும் சவாலானதாக கருதப்பட்ட இந்தப் பணியானது மிகப் பிரமாதமாக முடிந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இதுதான்.

பாக்யாங் விமான நிலையத்தில் 1.75 கிலோமீட்டர் தொலைவிலான ரன்வே அமைக்கப்பட்டுள்ளது. டாக்ஸிவே 116 மீட்டர் நீளம் கொண்டது.

அக்டோபர் 4ம் தேதி முதல், இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்க உள்ளது.

முதல் கட்டமாக கொல்கத்தா, டெல்லி, குவஹாத்தி நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :