முதல்வர் பதவியை பிடிக்க தினகரன் முயன்றார்! – அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

0
535
dinakaran trying posting chief minister - srinivasan speaking india tamil news

ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டு இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.dinakaran trying posting chief minister – srinivasan speaking india tamil news

ஒட்டன்சத்திரம் அதிமுக கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பகிரங்கமாக பேசினார். அதுபற்றிய விவரம் வருமாறு…

பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த தினம் மற்றும் இலங்கை தமிழர்களை இனப் படுகொலை செய்ய உதவிய காங்கிரஸ் மற்றும் திமுக மத்திய கூட்டணி அரசைக் கண்டித்து கண்டன பொது கூட்டம் மாவட்ட அளவில் அதிமுக சார்பாக நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு சீனிவாசன் பேசியாதவது :

லண்டன் காபிபோசா வழக்கில் கருணாநிதியிடம் பிச்சையெடுத்து தப்பித்துக்கொண்டு அம்மாவை பொய் வழக்கில் மாட்டிவிட்டு காட்டிக்கொடுத்த துரோகி தான் இந்த தினகரன்.

அம்மாவை கொலை செய்துவிட்டு அம்மாவை இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

அவரது மாமா திவாகரன் ஓரு கட்சி ஆட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் தம்பி பாஸ்கரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

திவாகரன் மகன் ஓரு கட்சி :

தினகரனின் மைத்துனர் ஓரு கட்சி, ஆக அந்த குடும்பத்தில் 10 கட்சி உள்ளது. கொள்ளையடித்த பணத்தை செலவழித்து ஆட்சியை மீட்டு விடலாம் என நினைக்கிறார்கள்.

பணம் இருப்பவர்கள் எல்லாம் முதலமைச்சர்களாக பிரதமர்களாக ஜனாதிபதியாக வந்துவிடலாம் என்றால் டி.வி.எஸ். அய்யங்கார்.

டெல்லியில் இருக்கக்கூடிய ரிலையன்ஸ் அம்பானி, டாட்டா, பிர்லா ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக, ஜனாதிபதியாக வந்திருக்க முடியும், பணம் இருப்பவர்களால் முடியாது, மக்களுக்காக உழைப்பவர்களால் தான் வரமுடியும்.

மக்களுக்கு உழைத்ததனால் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா 6 முறை முதலமைச்சர்.

37 எம்.பிக்கள் வந்துள்ளார்கள், அம்மா நம்மிடம் ஆட்சியை கொடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

காலியான இருக்கைகளை பார்த்து பேசிய அமைச்சர்கள் :

மழை காரணமாக ஒட்டன்சத்திரம் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் ஆரம்பித்தவுடன் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து ஒரு மணி நேரம் காலி இருக்கைகளை பார்த்து அமைச்சர்கள் சீனிவாசனும். தங்கமணியும் பேசினர்.

மின்சாரத்துறையில் நடைபெறும் ஊழல் குறித்து திமுக வழக்கு தொடுத்தால் அதை சந்திக்க தயார் என்று மின்சாரத்தறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அம்மா இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய் என்று முன்னுக்கு பின் முரணாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :