தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

0
794

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்ட மிகவும் பயங்கரமான தகவல்களை அடங்கிய அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Geneva Jasmin sooka Statement Sri Lanka Tamil News Today

“மௌனம் கலைந்தது” தப்பிவந்த ஆண்கள் சிறிலங்காவில் யுத்தத்தை மையப்படுத்தி நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்” என்றஅறிக்கை சிறிலங்காவிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களைமையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வாறான தகவல்களை இதற்கு முன்னர் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று யஸ்மின்சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயறதிட்டம் பகிரங்கப்படுத்திய இந்த அறிக்கையை தயாரித்த பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் டூகே ஐ.பீ.சிதமிழுக்க வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் வைத்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு 14வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றார். அதேவேளை இந்த அறிக்கைக்கு தகவல் வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவம், பொலிஸ் உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக அதிர்ச்சித் தகவலொன்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தன்னை விசாரித்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ சீருடை அணிந்திருந்த அந்த பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தியதாகவும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப்பெண் என்றும் கொடூரத்திற்கு முகம்கொடுத்த ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, அவர் உட்பட தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.

“பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மை ஆடைகளை களைந்து அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்” என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய இந்த அறிக்கை தொடர்பில் ஜெனீவா அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருபவரான மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலையும் அதிர்ச்சி வெளியிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites