மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை

0
247
cag worker murdered honour killing mumbai India Tamil News

மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (cag worker murdered honour killing mumbai India Tamil News)

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மனோஜ் சர்மா பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் வேற்று சாதியை சேர்ந்த 26 வயதுடைய சோனியா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இதன்பின்னர் இருவரும் வேலை தேடி மும்பைக்குச் சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டனர்.

குறித்த திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மனோஜுக்கு சிஏஜி அலுவலகத்தில் தரவுப்படுத்தல் பகுதியில் வேலை கிடைத்தது.

சோனியா மாநில அரசு தேர்வில் சித்தி பெற்று உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வேலை கிடைத்தது.

முசாபர் நகர் குத்பா கிராமத்தில் இருக்கும் தனது மாமனார், மாமியாரை பார்க்க மனோஜ் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார்.

மறுநாள் அவர் தனது பெற்றோரை பார்க்கச் சென்ற போது சோனியாவின் சகோதரர்களும் அவருடன் சென்றுள்ளனர்.

மனோஜ் தனது பெற்றோரின் வீட்டை அடையவில்லை. சோனியாவின் சகோதரர்களையும் காணவில்லை. இதனையடுத்து சோனியா தனது சகோதரர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

அவரது முறைப்பாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தேடியபோது மனோஜ் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் உடல் புதைக்கப்பட்டமை தெரியவந்தது.

சோனியாவின் 4 சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மனோஜுக்கு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அவர் டெல்லிக்கு செல்லும் முன்னர் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கர்ப்பணி பெண் கண் முன்பே அவரது கணவர் கொலை செய்யப்பட்டார்.

அது போன்றே மனோஜ் கொலையும் ஆணவக் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; cag worker murdered honour killing mumbai India Tamil News, Tamil News Live, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News