காதல் ஜோடியை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சாதிவெறி பிடித்த தந்தை

0
139
love couple run away drive knife-cut daddy india tamil news

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனாய் மீது அவருடைய மனைவி அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி பிரனாயை வெட்டி படுகொலை செய்த சம்பவம் 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது.love couple run away drive knife-cut daddy india tamil news

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றது.

ஐதராபாத்தில் உள்ள எஸ்ஆர் நகர் பகுதியை சேர்ந்த மாதவி, சந்திப் ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மாதவி மீது அவருடைய தந்தை மனோகர் ஆச்சாரி கடும் கோபத்தில் இருந்தார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் எஸ் .ஆர். நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எர்ரகட்டா பகுதியில் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மனோகர் ஆச்சாரி மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து இரண்டு பேரையும் ஓட ஓட விரட்டி வெட்டினார்.

சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்து நிலைகுலைந்து விழுந்தனர். அவர்களை பொதுமக்கள் அருகிலுள்ள நீலிமா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மாதவி ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை தீவிர சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்த எஸ்ஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மனோகர் ஆசிரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :