“தண்டனை தயாராக இருக்கிறது” இந்திய அணிக்கு சேப்பல் எச்சரிக்கை

0
395
former australia captain warning indian cricket team

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது.இந்நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி 2019-ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது. former australia captain warning indian cricket team,tamil sports news, sports news in tamil, ind vs aus, tamil news

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை களைவது மிகவும் அவசியமான ஒன்றாகும். பேட்டிங்கில் வலுவாக இருந்தால் மட்டுமே இந்திய அணி ஆஸ்திரேலிய பயணத்துக்கு துணிச்சலுடன் வர முடியும். ஏனென்றால், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எதிரணியை மிரளச் செய்யும் அளவுக்கு வலுவாக இருக்கிறது.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்து மதிப்பை இழந்துள்ளது. மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், பாட்ரிக் கம்மின்ஸ், சிடில் ஆகியோர் உடல் ரீதியாகத் தகுதி பெற்று விட்டால், இந்திய அணிக்கு மிகவும் வேதனையாகவும், சவால் நிறைந்த தொடராக அமைந்து விடும். மொயின் அலியின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததன் மூலம் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சைத் தவிர்த்து விட்டு அணியின் செயல்பாட்டைப் பார்த்தால், இந்திய அணி வாய்ப்புகளை வீணடித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் திறமையை குறைத்துமதிப்பிட்டு இந்திய அணி ஆஸ்திரேலியத் தொடரை எதிர்கொண்டால், எங்கள் அணிகொடுக்கும் தண்டனையை இந்தியா ஏற்கவேண்டியது இருக்கும இவ்வாறு இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். Tamil Sports News

former australia captain warning indian cricket team

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news