ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தக்கசிவு!

0
686
30 passengers traveling jet airways flight bleeding nose mouth

ஜெட் ஏர்வேஸில் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.30 passengers traveling jet airways flight bleeding nose mouth

மும்பையில் இருந்து ஜெய்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை பராமரிக்கும் அமைப்பை இயக்க பணிக்குழு மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விமானம் உயரே செல்லச் செல்ல பயணிகள்166 பேரும் அசவுகரியத்தை உணர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் 30 பேருக்கு மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வந்ததால், இருக்கைகளுக்கு மேல் பொருத்தப்பட்ட ஆக்சிஜன் மாஸ்குகள் பயணிகளின் பயன்பாட்டுக்காக இறக்கிவிடப்பட்டன.

பலர் கடுமையான தலைவலியையும் உணர்ந்தனர். இதையடுத்து விமானம் உடனடியாக மும்பைக்குத் திருப்பப்பட்டது.

விமானப் பணிக்குழுவினர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :