விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

0
498
13-year old girl raped vinayagar chaturthi india tamil news

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl raped vinayagar chaturthi india tamil news

மகாராஷ்டிராவில் திங்களன்று இரவு அகர் கிரமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்ற 13 வயது சிறுமியை சிலை வைக்கப்பட்ட பந்தலின் பின்புறம் இழுத்துச் சென்று 24 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பல்கர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹேமந்த் குமார் கட்கர், குற்றம் சாட்டப்பட்ட பந்தல் ஒப்பந்ததாரர் சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி வழிபாட்டு இடத்துக்குப் பின்னால் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து அந்த ஒப்பந்ததாரர் தப்பியோடி உள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்துத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒப்பந்ததாரர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள அவரைக் காவல்துறை தேடி வருகிறது, என்று தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :