ஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு

0
750
within year goat cows speak tamil nithyananda

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.within year goat cows speak tamil nithyananda

கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள ஆசிரமத்தில் சீடர்களிடம் அவர் உரையாற்றும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதில் அவர், மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் உள்ளுறுப்புகளில் சில வேறுபாடுகள் உள்ளது என்று கூறுகிறார்.

இதில் குரல்வளத்துக்கு காரணமான தொண்டையின் உள்பகுதியை சரிப்படுத்தி விட்டால் சிங்கம், புலி ஆகியவற்றை பேச வைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார்.

இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனை முறையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இன்னும் ஓராண்டுக்குள் குரங்குகள் , மாடுகளை பேசவைத்து காட்டுவதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :