நிம்மதியாக வாழ விரும்பினால் ஐ.தே.க வை ஆதரிக்க வேண்டும்! மிரட்டுகிறாரா விஜயகலா!

0
313

“கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வறுமையானவர்கள் இருக்கும்போது தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டது. இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு மட்டுமே உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தந்துள்ளது” என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Vijayakala Maheswaran Asks Support UNP Tamil Latest News

மேலும் அவர் இந்த நாட்டில் நீங்கள் நின்மதியாக வாழ வேண்டுமானால் ஐ.தே.கட்சியையே ஆதரிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் மிரட்டும் தொனியில் உரையாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த கால ஆட்சியில் யாழில் கானப்படும் வெற்றிடங்கள்கூட தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் மூலமே நிரப்பப்பட்டது. ஆனால் எனது ஆட்சியில் அவை தடுக்கப்பட்டது. எனவே தொடர்ந்து நீங்கள் நின்மதியாக வாழ ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்க வேண்டும்” – என்றார்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் ஜனாதிபதி மக்கள் செயலணி நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites