கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

0
149
Ensuring AIADMK join AMMK DTV Dinakaran interview

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp’s culture attack questioners? – ttv dinakaran

அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நம்மிடம் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். என்னிடமும் பல கேள்வி கேட்கிறார்கள். நானும் பதில் சொல்கிறேன்.

சிலர் என் மீது குறைகள் கூட சொல்லலாம். அதனையெல்லாம் எதிர்கொண்டு அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

அதுபோல பதில் சொல்ல வேண்டுமே தவிர, கேள்வி கேட்டார்கள் என்பதற்காக தாக்க கூடாது.

பாஜக விரத்தியில் இருப்பதால் தானோ என்னவோ கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை அடித்துள்ளார்கள்.

பொதுவாழ்விற்கு வந்த பிறகு வாக்கு கேட்க செல்லும்போது மக்களை அவர்களின் வீட்டுக்கே சென்று காலில் விழுந்து வாக்கு ட்கும் நாம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

கேட்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :