சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நடவடிக்கை!

0
433

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் 400க்கும் அதிகமான கருத்துக்களும், யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுகே தெரிவித்துள்ளார். Sri Lanka Government Commission Researching Salary Issues Tamil News

இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தற்பொழுது கிடைத்துள்ள கருத்துக்களையும், யோசனைகளையும் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகள் பற்றி கடந்த காலத்தில் குரல் எழுப்பிய தபால் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் கருத்துக்களும் யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி தொழிற்சங்கங்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பனவற்றின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பள ஆணைக்குழு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை கூடுகிறது. நான்கு குழுக்களின் கீழ் கருத்துக்களும், யோசனைகளும் ஆராயப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுகே மேலும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites