மகளின் திருமணத்திற்காக தந்தை செய்த காரியத்தால் சர்ச்சை

0
457
controversy made father daughter’s wedding

குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் சித்தூரை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர் மாவட்டம் யாத்மூரி பகுதியை சேர்ந்தவர் ரான்ஜி . இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இவர் தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் காந்தி வேடம் அணிந்த முதியவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரில் காந்தி போல் நின்று கொண்டு எதிரில் பாத்திரம் ஒன்று வைத்து உள்ளார்.

அதில் பலர் வருவோர்கள் அவரை பார்த்துவிட்டு சில்லரை மாற்றும் பணத்தை போட்டு சென்றனர்.

இதனை பார்த்த புறக் காவல் நிலைய காவலர்கள் முதியவரை அழைத்து தேசத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு என கூறி முதியவரை தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :