கோவாவின் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம் – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

0
429
chief minister goa – delhi aiims hospital

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்திலேயே உடல்நிலை குன்றியதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தற்போது முதல்வர் உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், முதல்வரின் நிர்வாக பொறுப்புகள் மூத்த அமைச்சர்கள் ஒருவரிடம் கொடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அவ்வாறு நிர்வாக பொறுப்பை மூத்த அமைச்சரிடம் தராததால், கூட்டணியில் இருக்கின்ற மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. இதனை காங்கிரஸும் விமர்சித்தது.

இந்நிலையில், கோவாவில் மாற்று அரசை நியமிக்க வேண்டி காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவலேகர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரும் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று மனு அளித்தனர்.

கோவாவில் பாஜக தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, மாற்று அரசு அமைக்க காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :