இறக்குமதி செய்யப்படும் புடைவைகளுக்கான VAT வரி குறைப்பு!

0
171
TAMIL NEWS Value Added Tax imported fabric reduced 10% stated

(TAMIL NEWS Value Added Tax imported fabric reduced 10% stated)

இறக்குமதி செய்யப்படும் புடைவைகளுக்கான பெறுமதி சேர் வரி (VAT) 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  15% ஆக இருந்த பெறுமதி சேர் வரியை 5% விதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி சீர்த்திருத்தம் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

புடைவைக் கைத்தொழில் சார்ந்த பங்குதாரர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இறக்குமதி செய்யப்படும் புடைவைகள் மீதான 5 சதவீத பெறுமதி சேர் வரி குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் இன்று (17) கைச்சாத்திட்டார்.

முன்னதாக புடைவைகள் இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரி 100 கிலோவுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(TAMIL NEWS Value Added Tax imported fabric reduced 10% stated)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

dded Tax imported fabric reduced 10% stated)