புத்தளம் பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்

0
453
Remarriage puttalam Pradeshiya Sabha chairman

புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவன், பிணை நிபந்தனையை மீறியதால் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (Remarriage puttalam Pradeshiya Sabha chairman)

மதுரங்குளி பகுதியில் 2010 ஆம் ஜனவரி 16 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அஞ்சன சந்தருவன் மீது புத்தளம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விசாரணைகளின் போது பிணை நிபந்தனையாக வெளிநாட்டிற்கு செல்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், அஞ்சன சந்தருவன் பிணை நிபந்தனைகளை மீறி கடந்த 9 ஆம் திகதி வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் இன்றைய தினம் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.எம். படபெதிகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Remarriage puttalam Pradeshiya Sabha chairman