எதிர்வரும் 2025 வரை ஜனாதிபி மைத்திரியே பதவியில் நீடிப்பார் – துமிந்த திசாநாயக்க

0
465
Duminda Disanayake said Maithripala Sirisena hold president 2025

(Duminda Disanayake said Maithripala Sirisena hold president 2025)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று( 17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2020 க்கு பின்னரும் ஜனாதிபதி பதவியில் மைத்திரிபால சிறிசேன நீடிப்பார் என உறுதியாக கூற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசே​னவை மீண்டும் ஜனாதிபதியா ஆக்குவதற்கான பொறிமுறை ஒன்றும் தங்களிடமிருப்பதாக கூறியுள்ள அவர், ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(Duminda Disanayake said Maithripala Sirisena hold president 2025)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites