பள்ளிக் குழந்தைகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடி

0
766
modi's birthday celebration school children

தனது 68-வது பிறந்தநாளையொட்டி சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.modi’s birthday celebration school children

உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அங்கு தொடங்கி வைக்கிறார்.

நலத்திட்டங்கள் மற்றும் புதிய கட்டங்கள் திறக்கப்படும் இந்நிகழ்ச்சி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையும் ஆற்ற உள்ளார்.

இதையடுத்து நரூர் கிராமத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாட உள்ளார்.

தனது பிறந்தநாளையொட்டி, தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :