நல்லாட்சி அரசாங்கம் பிரபாகரனுக்கு சமனானது- பிரசன்ன

0
263
Good governance equal Prabhakaran - Prasanna

சர்வதேச தேவைக்கு ஏற்ப செயற்பட்டு வரும் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதிதாக சமர்ப்பிப்பதற்கு இன்னும் என்ன யோசனைதான் எஞ்சியிருக்கின்றது எனவும், ஜனாதிபதி முன்வைக்கவுள்ளதாக கூறப்படும் புதிய பிரேரணை பிரச்சினைக்குரியது எனவும் கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. Good governance equal Prabhakaran – Prasanna

இலங்கை தொடர்பில் முக்கிய பிரேரணையொன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனைக் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பிரபாகரனுக்கு சமனானது. கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களுக்கு நஞ்சூட்டிய அரசாங்கம். மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்படும் ஒரு அரசாங்கமே இதுவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

tags :- Good governance equal Prabhakaran – Prasanna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites