RER A சேவை செயலிழப்பு Charles de Gaulle-Etoile நிலையத்துக்கும் La Défense நிலையத்துக்கும் இடையே உள்ள சுரங்கத்துக்குள் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு 11 மணிக்கு சுரங்கத்துக்குள் சென்றுகொண்டிருந்த RER A திடீரென தடைப்பட்டு நின்றது. 3 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் சுரங்கத்துக்கு நடுவே சிக்கிக்கொண்டனர். RER service struggled tunnel France news
அந்த ரயிலிற்குள் 1,400 பயணிகள் இருந்துள்ளனர். திடீரென சுரங்கத்துக்குள் சேவை தடைப்பட்டதும், பயணிகளுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஏனைய அதேவழி சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. தடைப்பட்டதுக்குரிய காரணங்கள் இதுவரை அறியமுடியவில்லை. பின்னர் அதிகாலை 1.30 மணிக்கு அனைத்து பயணிகளையும் தொடரூந்துக்குள் இருந்து வெளியே மீட்டனர்.
இந்த தொடரூந்து தடையால், மிகுந்த புழுக்கத்துக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டனர். பலர் இது குறித்து தங்கள் விசனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். RATP இரவோடு இரவாக திருத்தப்பணிகளை மேற்கொண்டு அதிகாலையில் சேவையினை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்.