தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

0
294
family member body recovery

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (family member body recovery)

இந்த சம்பவம் இன்று காலை 07 மணிளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றைப் பெற்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக அவரின் மனைவி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டவர் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீதரன் ராஜீவ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஹட்டன் நீதிமன்ற நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; family member body recovery