மைத்திரி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குகின்றது!

0
153
present government revengeing political opponents

{ present government revengeing political opponents }
தற்போதைய அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நூதனசாலையை நிர்மாணித்தமை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் உட்பட சிறிய குழுவினரை வேட்டையாடும் அரசாங்கத்தின் செயற்பாடாக இதனை குறிப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் விஷேட நீதிமன்றம் ஒன்றினை ஆரம்பித்து வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருளாதரத்தை பாரிய அளவில் பாதித்த ஊழல் தொடர்பில் தேடும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வழக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் அளவிற்கு பாராதூரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: present government revengeing political opponents

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites