இலங்கையின் புதிய அரசமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலை வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். Sri Lanka distribution system countries Canada Sampanthan
இலங்கைக்காக கனேடியத் தூதுவர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்தச் சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது-,
பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசமைப்பு அமைய வேண்டியதன் அவசியத்தையுப் கனடா உணரும் என நம்புகின்றோம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசு ஐ.நாவில் எமது மக்களுக்கு வழங்கும் ஒத்துழைப்பு உட்பட இங்கே மேற்கொள்ளும் பணிகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
இங்கே கருத்துரைத்த கனேடியத் தூதுவர் ஐ.நா. தொடர்பில் கனடா எடுக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அதே நேரம் ஐ.நாவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.- என்றார்.
இவற்றைச் செவிமடுத்த கனேடியத் தூதுவர், அரசமைப்புத் தொடர்பான நகர்வுகளை அவதானித்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
tags :- Sri Lanka distribution system countries Canada Sampanthan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- கடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை
- வடமாகாண முதலமைச்சர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை
- இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்
- நாயாற்றில் மீண்டும் பதற்றம்; கிளர்ந்தெழுந்த பொதுமக்கள்
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்