சுதந்திரக் கட்சியின் 16 பேருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை! மஹிந்த அமரவீர கோரிக்கை!

0
414

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுக்கு எதிராக முதுகெலும்பை நிமிர்த்திய நிலையில் தைரியமான ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும், அதனை கட்சியிடமிருந்து தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். Sri Lanka Freedom Party 16 Members Legal Action Participate Protest Tamil News

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் செல்லும் போது கூட்டு எதிர்க் கட்சியின் ஜனபலய நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தலைமையகத்தைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டு சென்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுசேர்ப்பதாக கூறிக் கொண்டு அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது. கட்சியை இழிவுபடுத்துபவர்களுடன் இணைந்துள்ள இவர்களுக்கு எதிராக என்ன தீர்மானத்தை கட்சி எடுக்கப் போகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites