கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்துக்கு மைத்திரியின் ஆதரவு! சர்ச்சையை கிளம்பியுள்ள எஸ்.பீ. திஸாநாயக்க!

0
236

கூட்டு எதிர்க் கட்சியின் மக்கள் சக்தி நடவடிக்கைக்கு அரசாங்க தரப்பிலிருந்து எந்தவித தடைகளும் வராமல் இருந்தமைக்குக் காரணம், ஜனாதிபதியின் ஆசீர்வாதம் இந்த நடவடிக்கையின் மீது இருந்தமையே ஆகும் என அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். President Maithri Supports Joint Opposition Party Protest Tamil News

நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்துக்கு வந்த அத்தனை பேரும் கோரிய ஒரே விடயம், ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத புதிய அரசாங்கம் மட்டுமே ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணி ஒழுங்கு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கம் எதுவித தடைகளையும் விதிக்காமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளிக்கும் முகமாகவே எஸ்.பீ. திஸாநாயக்க குறித்த கருத்தை கூறியுள்ளார்.

எஸ்.பீ. திஸாநாயக்க கூறியுள்ள பதில் மூலம் ஜனாதிபதி மைத்திரியின் மறைமுகமான ஆதரவு குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு இருந்ததா என பலத்த சந்தேகம் கிளம்பியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites