வெலிகந்த பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

0
205
Police probe suspicious death body found Welikanda

வெலிகந்த குடாஓய பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. (Police probe suspicious death body found Welikanda)

அசேலபுர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பியரத்ன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக உயிரிழந்தவரின் மகனினால் வெலிகந்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை குறித்த நபருடைய மகன்கள் தன்னுடைய தந்தையை தேடி நண்பர்களுடன் காட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

இதன்போதே அவருடைய சடலத்தை கண்டு பொலிஸாரிற்கு அறிவித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் தொலைபேசி மற்றும் பாதணிகள் சடலத்திற்கு அருகில் இருந்ததுடன், இரத்தக் கறைகளும் இருந்ததால் குறித்த நபரின் மரணம் தொடர்பில் சந்தேக நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Police probe suspicious death body found Welikanda