எதிர்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வரும் இன்று சந்திப்பு!

0
469
Opposition Leader North Chief today meet

{ Opposition Leader North Chief today meet }
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையே இன்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் எதிர்கட்சி தலைவரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதேநேரம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையே நிலவுகின்ற கருத்து முரண்பாட்டால் அவர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தனர்.

அந்த சூழ்நிலையிலே இன்றைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எவ்வாறாயினும், புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிக்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் தம்மை இந்த சந்திப்பில் வைத்து கோரலாமென வடக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Opposition Leader North Chief today meet

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites