போலி மாணிக்க கற்களை விற்பனை செய்த நபர் கைது!

0
527
Man arrested selling fake jewels

{ Man arrested selling fake jewels }
போலி மாணிக்க கற்களை காண்பித்து தங்க நகைகள் மற்றும் பண மோசடி செய்த சந்தேகநபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுகம, பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் களுத்திறை, சட்டத்தை அமுலாக்கும் பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடம் கைக்குண்டு ஒன்று, போலி மாணிக் கற்கள் மற்றும் தங்கம் பூசப்பட்ட மாலைகள் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tags; Man arrested selling fake jewels

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites