அரச தலைவர் தேர்தலை நடந்த வேண்டும் என்று தாமரை மொட்டுக்காரர்கள் கேட்கின்றனர். ஆர்ப்பாட்டத்தையே செய்ய முடியாதவர்கள் எவ்வாறு நாட்டை முன்கொண்டு செல்வார்கள்?. நாட்டின் எதிர்காலச் சந்ததிக்கு கடன்சுமையுடனான பொருளாதாரத்தைக் கையளிப்பதல்ல எமது நோக்கம். கடனைச் செலுத்தக் கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். இவ்வாறு தெரிவித்தார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. Mahinda Protest Ranil Comments
ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றன. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது
2015ஆம் ஆண்டு நாம் அதிகாரத்தைக் கைப்பற்றினோம். மக்களின் அங்கீகாரத்துடனே நாம் தெரிவானோம். நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
பெரும் கடன்சுமையுடன் நாம் நாட்டைப் பொறுப்பேற்றோம். பல ஆண்டுகளாக உற்பத்திகள் நடக்கவில்லை. கடன் பெற்ற வங்கிகளை நாம் எதிர்கொண்டோம். வெள்ளத்தை எதிர்கொண்டோம். முன்னையவர் தப்பிச் சென்றார்.
இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் நாட்டைப் பொறுப்பேற்றோம். எனினும் பல்கலைக் கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் தொகையை அதிகரித்தோம். கணினிகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தோம். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின்கீழ் 9 ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தோம்.
4 ஆயிரம் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தோம். மருந்துப் பொருள்களின் விலைகளைக் குறைத்தோம். சுவசெரிய நோயாளர் காவு வண்டிச் சேவையை ஆரம்பித்தோம். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தினோம். இவை அனைத்தையும் கஷ்டமான காலப்பகுதியில் நாம் செய்தவையாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகமும் வானூர்தி நிலையமும் அன்று பெயரளவிலேயே இருந்தது. நாம் இவற்றை பொருளாதார கேந்திர நிலையமாக இன்று மாற்றி அமைத்துள்ளோம். மத்தள விமான நிலையத்தையும் நாம் வெற்றிபெற செய்வோம். இந்த விடயங்களில் சிரமமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. வற் வரி அதிகரிகப்பட்டமை நாட்டின் நலனுக்காகவே. கடனை செலுத்தக்கூடிய பொருளதார கட்டமைப்பை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
அதற்காகவே கம்பெரலிய, என்ரபிரைஸ் சிறிலங்கா வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தொழில்வாய்ப்புக்கள் தற்போது வழங்கப்படுகின்றன. பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொண்டு நாடு தற்பொழுது முன்னோக்கி பயணிக்கின்றது. 2025ஆம் ஆண்டுக்குக் பின்னரும் முன்னோக்கி பயணிப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.- என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- கடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Mahinda Protest Ranil Comments , Mahinda Protest Ranil Comments News