பௌத்த மதத்துக்கே முன்னுரிமை – இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவிப்பு!

0
371

பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்ற விடயத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். Deputy Minister Niroshan Fernando Buddhism Statement Tamil News

ஆனால், ஏனைய மதங்களுக்குரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, புதிய அரசியல் யாப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக புதிய அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவிலுள்ள 19 உறுப்பினர்கள் மட்டுமே பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள இரண்டாவது அத்தியாயத்தை அவ்வண்ணமே பேணிவருமாறு குறிப்பிட்டுள்ளனர் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த போதே நிரோஷன் பெர்ணான்டோ மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, தற்போது பௌத்த மதம் பற்றி பேசுபவர்கள், தலதாமாளிகைக்கு அருகில் காரோட்டப் பந்தயம் நடத்தப்பட்டபோது எவ்வித மறுப்பையும் தெரிவிக்காமை கவலையளிப்பதாகவும் நிரோஷன் பெர்ணான்டோ இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites