கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

0
267
Person arrested firearm Hakka Patas cannabis

ஹங்குரங்கெத, ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Person arrested firearm Hakka Patas cannabis)

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கியுடன் சேர்த்து அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறு ரக வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து ஒரு கிலோ கிராமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்றைய தினம் வலப்பானை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Person arrested firearm Hakka Patas cannabis