காணாமல் போகச்செய்யப்பட்டமை, கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள மற்றும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அவர்கள் மீதான வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகும் வரை இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டுமென காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. OMP interim report
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவ்வறிக்கை இன்றைய தினம் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது.
மேற்படி சந்தேகநபர்களான அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் இராணுவத்தில், பொலிஸில் அல்லது பொதுச் சேவைகளில் இடமோ அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை வழங்கப்படக்கூடாதென குறித்த இடைக்கால அறிக்கையில் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றங்களை புரிந்தோர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு , தண்டனை பெற்றுக்கொடுக்க தேவையான பொருள் மற்றும் மனித வளங்களை பெற்றுக்கொடுக்கும்படி குறித்த அறிக்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம்
- பதுளையில் ஒன்றிணைந்த எதிரணியினரின் பேரூந்தின் மீது தாக்குதல்
- 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்
- ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்
- பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது
- கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறும் வீதிகள்
- நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு
- எதிரணியினரின் பேரணியில் முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கு அனுமதி
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்