வடக்கு மாகாண தாதி­யர்­கள் சுக­வீன விடுப்­புப் போராட்­டத்­தில்!

0
188

வடக்கு மாகாண சபை­யின் கீழ் இயங்­கும் மருத்­து­வ­ம­னை­க­ளில் பணி­யாற்­றும் தாதி­யர்­கள் இன்று சுக­வீன விடுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வுள்­ள­னர் என்று அரச தாதி­யர் உத்­தி­ யோ­கத்­தர் சங்­கத்­தின் உப தலை­வர் சிவ­யோ­கன் தெரி­வித்­தார். Northern Province Nurses Sick Leave

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

2016ஆம் ஆண்டு மருத்­துவ சேவை நிலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மேல­திக நேரக் கட­மைக் கொடுப்­ப­னவு வழங்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதற்­கான நிதி நடப்­பாண்டு வரவு செல­வுத் திட்­டத்­தில் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. கடந்த ஆண்­டுக்­கான நிதி எமக்கு இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் கிழக்கு மாகாண சபை­யின் கீழ் இயங்­கும் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­று­ப­வர்­கள் மற்­றும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் கீழ் இயங்­கும் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு இன்­று­வரை இந்­தப் பணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனை வழங்க வலி­யு­றுத்­தியே இன்று போராட்­டத்­தில் குதிக்­க­வுள்­ளோம் – என்­றார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites