கொழும்பு பேரணியின் இரண்டாம் கட்டம் கண்டியில் ஆரம்பமாகும்!

0
374
Joint Opposition longest popular rally Sri Lankan history protest rally

(Joint Opposition longest popular rally Sri Lankan history protest rally)

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட மற்றும் அதிக மக்கள் பங்கேற்ற பேரணி, “மக்கள் பலம் கொழும்பிற்கு” என்ற எதிர்ப்பு பேரணிதான் என்று கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மக்கள் பலம் கொழும்பிற்கு எதிர்ப்பு பேரணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்

சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை அதில் கலந்துகொண்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

நேற்றைய பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என்றும், இந்த எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

(Joint Opposition longest popular rally Sri Lankan history protest rally)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites