கோடிக்கணக்கான போதைக் குளிசைகள் சிக்கின!

0
396
Illegal Drug Tablets Found

கொழும்பு துறை​முகத்தில் இறக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து,1 5,050,170 போதை குளிசைகள் சிக்கினவெனத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், அதன் பெறுமதி 15 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. Illegal Drug Tablets Found

சுங்கப் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக லிபியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி சரியாக மதிப்பிட முடியவில்லை என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாத்திரைகளும் 225 மில்லி கிராம் டெமடோல் வகையை சேர்ந்தது என்றும், அவற்றின் பெறுமதி சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites