‘செக்கச்சிவந்த வானம்’ பாடல்கள் ரிலீஸ்

0
536
chekka chivantha vaanam movie songs release, chekka chivantha vaanam movie songs, chekka chivantha vaanam movie, chekka chivantha vaanam, sekka sivantha vaanam, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

காற்று வெளியிடை படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும்  செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், எதிர்ப்பார்ப்பையும் கூட்டியுள்ளது.chekka chivantha vaanam movie songs release

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படத்தில் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மிகப்பெரிய தொழிலதிபராக வருகிறார். அவரின் மூத்த மகனாக அரவிந்த்சாமியும், இரண்டாவது மகனாக அருண் விஜய்யும், கடைக்குட்டியாக சிம்புவும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் சேதுபதியும், தனது நண்பன் அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைக்கிறார்.

படம் செப்டம்பர் 28ம் திகதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு (நவாப்) என 2 மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், செப்டம்பர் 5ம் திகதி படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

Tag: chekka chivantha vaanam movie songs release

எமது ஏனைய தளங்கள்