வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்

0
538
56 students hospitalized food allergies watawala

வட்டவளை டெம்பஸ்டோ தோட்ட பகுதியில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 56 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (56 students hospitalized food allergies watawala)

டெம்பஸ்டோ தோட்ட கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பேற்ற ஆலய உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டமையினால் 56 சிறுவர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக வட்டவளை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக வட்டடவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக இருவர் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவர்கள் உட்கொண்ட உணவினை பிரதேச சுகாதார பரிசோதகர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 56 students hospitalized food allergies watawala