முல்லைத்தீவில் புத்தர்சிலை வைக்க சென்றவர்களை விரட்டியடித்த இளைஞர்கள்!

0
363

முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்குமார் அடங்கிய குழுவொறைினை குமுழமுனை பிரதேச இளைஞர்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். Mullaitivu Young Men Stop New Buddha Statue Work Tamil News

சிலை வைக்க வருவதை அறிந்த குமுழமுனை இளைஞர்கள் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு சென்றவேளை அதை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற நிலையில் தன்னிமுறிப்பு குளக்கட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் வழி மறித்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியுள்ளனர்.

இதனால் அப் பகுதியில் முறுகல் நிலை தோன்றியுள்ளதோடு பிக்குகள் குழு பிரதேச வாசிகளின் எதிர்ப்பினை தாங்க முடியாத நிலையில் பொலிஸாரின் தலையீட்டுடன் அனைத்துப் பொருட்களுடனும் திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பிரதேசமான தமிழர்களுடன் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் அங்கு பல நூற்றாண்டு காலமாக ஐயனார் ஆலையமொன்று இருந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites