நாட்டின் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Mahinda Speech Joint Opposition Rally
கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொது எதிரணியின் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்;
நாட்டின் ஜனநாயகம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது, என்றார்.
மேலும் இவ் ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் படி எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கொழும்பு கோட்டை பகுதியில் வீதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் தொடர்ச்சியாக கலைந்து செல்வதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
எனினும் இவர்கள் இன்றிரவு அங்கு தங்கியிருப்பவர் எனவும் அங்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வருவதாகவும் பொது எதிரணி தெரிவிக்கின்றது.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை தொடர்ச்சியாக நிலைத்திருக்கச் செய்திருக்கும் பொருட்டு வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி