எதிரணியினரின் பேரணியில் முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கு அனுமதி

0
730
Jana Balaya Colambata protest

ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின் போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது, முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் கூட்டு எதிரணியினர் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர். (Jana Balaya Colambata protest)

இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி முழங்காலின் கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக காலிற்கு கீழ் சுடுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்றுவரும் பேரணி கட்டுக்கடங்காததாக மாறினால் பொதுமக்களின் சொத்திற்கும் உயிர்களிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் பொலிஸார் இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி முழங்காலின் கீழ் சுடுவதற்கு தயங்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் இந்த தீர்மானம் குறித்து பாதுகாப்பு பேரவைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Jana Balaya Colambata protest